Regional03

மருத்துவக் கல்வியில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஸ்டாலின் போராடிய பிறகே தமிழக ஆளுநர் ஒப்புதல் கனிமொழி எம்.பி. கருத்து

செய்திப்பிரிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்திய பிறகே மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார் என்று கனிமொழி எம்பி கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்திய பிறகே ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். ஆளுநர் காலதாமதம் செய்தது தமிழக மக்களுக்கு இழைத்திருக்க கூடிய அநீதி என்றார்.

SCROLL FOR NEXT