Regional02

அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று கிழக்கு மாவட்டத்துக்கான கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தை சிலர் சீர்குலைக்கப் பார்ப்பதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் கள். அனைத்துத் தகுதிகளையும் கொண் டுள்ள அறந்தாங்கியை தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார், அண்ணா மற்றும் இடதுசாரிகளை எதிர்ப்பவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றார். பின்னர், பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றினார்.

இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநிலச் செயலாளர் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் துரை முகமது, மாநில விவசாய அணிச் செயலாளர் அப்துல்சலாம், மாவட்டச் செயலாளர் முபாரக் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT