போளூர் அடுத்த ஓதலவாடி கிராமத்தில் நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசும் எம்எல்ஏ கே.வி.சேகரன். 
Regional02

சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வரும் தமிழக அரசுக்கு திமுக எம்எல்ஏ நன்றி

செய்திப்பிரிவு

சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வரும் தமிழக அரசுக்கு திமுகஎம்எல்ஏ சேகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

தி.மலை மாவட்டம் போளூர் அடுத்த ஓதலவாடி கிராமம் சூசை நகரில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். முன்னதாக, இந்த முகாமை தொடங்கி வைத்து போளூர் சட்டப்பேரவை உறுப்பி னர் (திமுக) கே.வி.சேகரன் பேசும் போது, “தமிழக அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்படுகிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், அனைத்து அரசும்செய்வது போல், இந்த அரசும் (அதிமுக அரசு) மருத்துவ முகாம் களை நடத்துகின்றன. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சிக்கு நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம். மக்கள்பயன்பெற செய்யும் செயல்களை நாங்கள் வரவேற்போம். அதனடிப் படையில், இந்த முகாமையும் நாங்கள் வரவேற்கிறோம். எனவே, நமது உடல் மற்றும் உறுப்புகளை பாதுகாத்து நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்” என்றார். முகாமில், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திமுக எம்எல்ஏ பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT