Regional02

அவிநாசி கோயில்களில் அன்னாபிஷேக விழா

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நேற்றுமாலை அவிநாசி லிங்கேஸ்வரருக்கு பால், தயிர்உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து அன்னம்சாத்தும் அன்னாபிஷேக நிகழ்ச்சிநடைபெற்றது. பழ வகைகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, திருமுருகன் பூண்டி திருமுருகநாதசாமி கோயில், பழங்கரை பொன் சோழிஸ்வரர் கோயில், கருவலூர் கங்காதீஸ்வரர் கோயில், சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர்வாலீஸ்வரர் கோயில், பெருமா நல்லூர் உத்தம லிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில் களில் சிறப்பு வழிபாடுகள், அன்னாபிஷேகம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT