Regional01

கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை தலித் கிறிஸ்தவர்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கத்தோலிக்க திருச்சபை களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக கூறி விழுப்புரத்தில் தலித்கிறிஸ்தவர் விடுதலை இயக்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இவ்வியக்கத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெர்னாண்டஸ் , கிறிஸ்தவ மக்கள் களம் ஒருங்கிணைப்பாளர் மரிய எட்வர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கத்தோ லிக்க திருச்சபையின் பேராயர், ஆயர்கள், குருக்கள் பதவி மற்றும் பணியிடங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது.

காலியாக உள்ள பதவிகளை விகிதாச்சார அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

புதுச்சேரி மறை மாநிலத் திற்கு புதிய தலித் பேராயர் நியமிக்க வேண்டும். தலித் குருக்களையும், தலித்கிறிஸ்தவர்களையும் சமத்துவமாகநடத்த வேண்டும், சம வாய்ப்புவழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

SCROLL FOR NEXT