திண்டிவனம் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வேல்பாண்டியன் என்பவர் தனது குடும்பத்தின ருடன் சென்னை வேளச்சே ரியில் தனது உறவினர் துக்கநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்.
பின்னர் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை காரில் அருப்புக்கோட்டைக்கு திரும்பி கொண்டிருந்தார்.
திண்டிவனத்தை அடுத்த கன்னிகாபுரம் அருகே காலை5 மணிக்கு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில்பயணம் செய்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் மகன் கௌதம் (28),முருகேசன் மனைவி சுப்புலட்சுமி (50) மற்றும் வேல்பாண்டியன் (37) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த முருகேசன் (56), முத்து மனைவி பேச்சியம்மாள் (55), சேகர் மனைவி ஜெயந்தி (60), வேல் பாண்டியன் மனைவி லட்சுமிபிரியா (27) வேல்பாண்டியன் குழந்தைகள் கமலினி (3,) அருள்சுனை யாழினி (5) ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். இவர்களில் ஜெயந்தி நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாலையில் பேச்சியம்மாள் உயி ரிழந்தார்.
மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கண்டெய்னர் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சீனுவாசன் (40) என்பவரை கைது செய்தனர்.