மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 
Regional02

சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக காங். கையெழுத்து இயக்கம்

செய்திப்பிரிவு

சிதம்பரம் அருகே உள்ள வண்டிகேட் பகுதியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரியின் ஆலோசனையின் பேரில் மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பரங்கிப்பேட்டை வட்டார தெற்கு, வடக்கு காங்கிரஸ் சார்பில் நேற்று வண்டிகேட்டில் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பரங்கிப்பேட்டை தெற்கு வட்டார தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன், பரங்கிப்பேட்டை வடக்கு வட்டார தலைவர் ரவி, பரங்கிப்பேட்டை நகர தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பார்வையாளர் கணிவண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, ஜெயச்சந்திரன், தமிழரசன், கட்டாரி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள், தொழிலாளர் களிடம், பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

SCROLL FOR NEXT