தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக் குழுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. மாவட் டத்தலைவர் அருவள்ளியப்பா தலைமையில்
இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் எழிலன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
ஊதிய ஊக்க உயர்வு நிறுத்த ஆணையை திரும்ப பெற வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட 17 பி நடவடிக் கையை ரத்து செய்ய வேண்டும்.
பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் இடமாறுதல் கலந் தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும்.
ஆசியர் களின் பணபலன் களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து இச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்தல் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.