Regional02

சதுரகிரியில் பக்தர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. ஐப்பசி பவுர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் கோணத் தலைவாசல் என்னும் பகுதியில் சென்றபோது, வில்லிபுத்தூர் தேரடித் தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி (34) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT