Regional03

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியர்-அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கிடையே அம்மசோதாவுக்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்து விட்டார்.

அரசுப் பள்ளிகளைப் போன்று அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை, விலையில்லாப் பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இதனால் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியர்-அலுவலர் சங்க மாநி லப் பொருளாளர் நீ. இளங்கோ கூறியதாவது:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டதை வரவேற்கிறோம். அரசுப் பள் ளியைப் போன்று உதவிபெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள்தான் படிக்கின்றனர். அவர்களில் பலர் சிரமப்பட்டுத் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெறு கின்றனர்.

இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீடு பாதிக்காத வகையில் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காக கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT