கோவையைச் சேர்ந்தவர் விஜயன். பெங்களூருவில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றார். நேற்று காரில் கோவைக்கு திரும்பிச் செல்லும் வழியில் விருதுநகரில் உள்ள தனியார் உணவகத்துக்குச் சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்தபோது உணவகம் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த 18 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன.
மேலும், அருகில் நின்றிருந்த மற்றொரு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு மடிக்கணினி திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.