தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதால் எதிர்க்கட்சிகள் பயப் படுகின்றன என அக்கட்சி மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசினார்.
மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு உத்தங்குடியில் நேற்று நடந்தது. இதில் மாநிலத் தலைவர் முருகன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக எங்கிருக்கிறது என்று கேட்டனர். இப்போது எதிர்க்கட்சிகள் பயப் படும் அளவுக்கு பாஜக வளர்ந்து வருகிறது. பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.தற்போது வேல் யாத்திரையை தடுக்கப் பார்க்கிறார்கள். இந்த யாத்திரை திட்டமிட்டவாறு நடை பெறும். அப்போது மத்திய அரசின் திட்டங்களை வீடுவீடாக எடுத்துச் செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இம்மாநாட்டில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான கோவிந்தன் தலைமையில் 25 வழக்கறிஞர்கள் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சித் தலைவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் பாஜகவில் இணைந்தனர்.