Regional02

சி க்கண்ணா அரசு கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு

செய்திப்பிரிவு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை அனைத்து கல்லூரி களிலும் அமல்படுத்த வேண்டு மென்ற கல்லூரி கல்வித் துறையின் அறிவுரைப்படி, திருப்பூர்சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் என்.எஸ்.எஸ். அலகு - 2 சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குமுதல்வர் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன், ஊழல் தொடர்பான நிகழ்வை உரிய அதிகாரஅமைப்புக்கு தெரியப்படுத்துவேன் என்று மாணவர்களும், பேராசிரியர்களும் உறுதி ஏற்றனர்.

முன்னதாக, எஸ்.எஸ்.எ.எஸ். அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். மாணவ செயலர் சந்தீப் மேற்பார்வையில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, புஷ்பலதா, அமிர்தவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT