Regional02

நீலகிரி அதிமுக அலுவலகம் திறப்பு

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் அதிமுகவுக்கு மாவட்ட அலுவலகம் இல்லாமல் இருந்து வந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,மாவட்ட செயலாளராக கப்பச்சிடி.வினோத் பொறுப்பேற்றதும், அலுவலகம் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. உதகை சர்ச் ஹில் பகுதியில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடினர். மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத், முன்னாள் எம்.பி. கே.ஆர்.அர்ஜுணன், குன்னூர் எம்எல்ஏ சாந்தி ஏ.ராமு உட்பட பலர் பங்கேற்றனர்

SCROLL FOR NEXT