Regional02

மரக்காணம் பேரிடர் பாதுகாப்பு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

பருவ மழை வலுப் பெற்று வரும் நிலையில், மரக்காணம் அருகே அழகன்குப்பம், நொச்சிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள பேரிடர்கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று ஆய்வு செய்தார்.

பேரிடர் மைய பாதுகாப்பு மையங்களில் படுக்கை, உணவு,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மரக்காணம் வட்டாட்சியர் உஷாராணி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், பேரிடர் மேலாண்மை மாவட்ட திட்ட அலுவலர் வாசுதேவன் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT