Regional02

போக்குவரத்துக் கழக கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி நகர் கிளை போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு 14- வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி, தொமுச மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் வரதராஜன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பணிமனை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர் களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

SCROLL FOR NEXT