Regional01

உப்பிலியபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி, ரேஷன் கார்டுக்கு ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். அரிசி, பாமாயில், சர்க்கரை மற்றும் மாவு வகைகளை ரேஷன் கடையில் இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உப்பிலியபுரம் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் டி.வி.அன்பழகன் தலைமை வகித்தார்.

இதில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.பழனி சாமி, ஒன்றியச் செயலாளர் டி.முத்துக்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜி.முத்துக் குமார், ஏ.கணேசன், ஆர்.முத் துக்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT