திருநெல்வேலி சந்திப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரண்டனர். இதனால் வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம் மு. லெட்சுமி அருண் 
Regional01

நெல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

செய்திப்பிரிவு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பு களைச் சேர்ந்தவர்களும் திரண் டனர்.

இவர்களது நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் அப்பகுதியில் சாலையில் குவிந்ததால், இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தேவர் சிலையிலிருந்து கிழக்காக வண்ணார்பேட்டை வரையிலும், மேற்கில் ஈரடுக்கு மேம்பாலம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வரையிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்லநேரிட்டது.

SCROLL FOR NEXT