முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தியை முன்னிட்டு வடக்கு இலந்தைகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மரியாதை செலுத்தினார். 
Regional02

தேவர் சிலைக்கு அமைச்சர், பல்வேறு கட்சியினர் மரியாதை

செய்திப்பிரிவு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 113-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்எல்ஏ போ.சின்னப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் நகரச் செயலாளர் கா.கருணாநிதி, மேற்கு ஒன்றியச் செயலாளர் வீ.முருகேசன், மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகரச் செயலாளர் பால்ராஜ், பாஜக சார்பில் வடக்கு மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, அமமுக தென்மண்டலப் பொறுப்பாளர் மாணிக்கராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி

தென்காசி

திருநெல்வேலி

SCROLL FOR NEXT