தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவு தொழிலாளர் உதவி ஆணையர் நா. முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரி யம் மற்றும் இதர 15 நலவாரிய ங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார த்துக்கு உதவும் வகையில் தமிழக அரசு தலா ரூ. 2,000 நிவாரண நிதி வழங்க உத்தர விட்டது.
தற்போது வரை கரோனா நிவாரண நிதி கிடைக்கப்பெறாத தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர்கள் தங்களது நலவாரிய அட்டையின் அனைத்து பக்கங்கள், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை நகல்களை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு நவம்பா் 5-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.