ஃபாவத் சவுத்ரி 
BackPg

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில்இம்ரான் கான் அரசுக்கு பங்கு பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்

செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த கேபினட் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று பேசும்போது, “இந்தியாவை அதன் சொந்த மண்ணில் நாம் தாக்கினோம். புல்வாமாவில் நடந்த வெற்றிகரமான தாக்குதலானது, இம்ரான் கான் தலைமையிலான அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும். நீங்களும் நானும் இந்த வெற்றியில் பங்கு வகித்தவர்கள். இம்ரான் கான் தலைமையிலான அரசின் மிகப்பெரிய சாதனையாக இதைப் பாராட்டுகிறேன்” என்றார்.

இதன்மூலம் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு பங்கு இருப்பது அம்பலமாகி உள்ளது.

SCROLL FOR NEXT