BackPg

நாங்கள் அடித்ததெல்லாம்பீல்டர் கைகளுக்கே சென்றது பெங்களூரூ கேப்டன் கோலி ஆதங்கம்

செய்திப்பிரிவு

‘‘நாங்கள் அடித்த பந்து எல்லாம் பீல்டர் கைகளுக்கே சென்றது’’ என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். மும்பை அணிக்கு இது 8-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 16 புள்ளியுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை ஏறக்குறைய உறுதி செய்தது.

அதேவேளையில் 5-வது தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, ‘‘பேட்டிங்கில் ஒரு விசித்திரக் கட்டம் வந்தது. நாங்கள் அடித்ததெல்லாம் பீல்டர் கைகளுக்கே சென்றது. மும்பை அணி நன்றாக வீசி எங்களை 20 ரன்கள் குறைவாக எடுக்கச் செய்தனர். ஆனாலும் சவால் கொடுத்தோம். ஸ்விங் ஆகும் என்று நினைத்து மோரிஸ், டேல் ஸ்டெய்னை வீசச் செய்தோம். பிறகு வாஷிங்டன் சுந்தரை அழைத்தேன். ஆட்டம் நெருக்கமானதுதான், ஆனால் ஒரு சில கட்டத்தில் அவர்கள் நன்றாக ஆடினார்கள்” என்றார்.

இன்றைய ஆட்டம்

பஞ்சாப் - ராஜஸ்தான்

இடம்: அபுதாபி

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

SCROLL FOR NEXT