Regional02

பள்ளி அருகே மின் விபத்து அபாயம்

செய்திப்பிரிவு

பாஜக முன்னாள் கவுன்சிலர் நடராஜன், திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ள மனுவில், "திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டு ஈ.பி.காலனி முருங்கைத்தோட்டப் பகுதியில் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதுடன், மின் கம்பிகள் அருகில் உள்ள மரங்களோடு உரசியவாறு உள்ளன. மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், மின் கம்பியில் உராய்வு ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளது. இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT