கடலூர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 
Regional01

கடலூர் மாவட்டத்தில் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் 13 வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் அலுவலகங் களிலும் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கடலூர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், "மக்காச்சோள விவசாயிகளுக்கு காப்பீடு பிரீமிய தொகை கட்டுவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். பயிர் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உரிய விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT