Regional02

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு விவகாரத்தை பாஜக திசை திருப்ப முயற்சி

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சியில் தமிழ் பேரரசு கட்சித் தலைவரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் நேற்று கூறியதாவது:

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் ஆளும் மத்திய பாஜக அரசு தாமதம் செய்வதை மறைப்பதற்காக, திட்டமிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சை சர்ச்சையாக்கியுள்ளது. மக்களை திசை திருப்பி விட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் குஷ்பூ. எச். ராஜா போன்றவர்களால் கலவரம் தூண்டப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது. இது முறியடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT