Regional02

கனிமொழி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

திமுக சார்பில் கடந்த 2018-ம்ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி அதிமுக ஆட்சியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, முதல்வரை அவதூறாக கனிமொழி பேசியதாக மாவட்ட அரசு வழக்கறிஞர் சீனுவாசன் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், வரும் 18-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT