Regional02

இணைய வழியில் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி

செய்திப்பிரிவு

வேலை வாய்ப்பற்றவர்களுக்கு இணைய வழியில் இலவசமாக குறுகிய கால பயிற்சி அளித்திடும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் கோர்ஸரா (Coursera) என்ற அமெரிக்க நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பயிற்சி முடிந்தவுடன் இணையம் வழியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலை வாய்ப்பும் அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் சேர, ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் வரும் 31-ம் தேதிக்குள்

"https;//www.tnskill.tn.gov.in" என்ற இணையதளத்திலும், விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும் அல்லது 04146 226417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பெயர்களை பதிவு செய்யலாம் என விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT