ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 
Regional03

ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கிடுக

செய்திப்பிரிவு

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,சூரிய மின்சக்தி பசுமை வீடுகள் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை கோரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார். திட்ட இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT