Regional03

லஞ்ச ஒழிப்பு சோதனை வானூர் சார்-பதிவாளர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

வானூர் சார் பதிவாளர் அலுவ லகத்தில் நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி எஸ் பி யுவராஜ் தலைமையிலான போலீஸார் சோதனை மேற் கொண்டனர். இதில், ஆன் லைன் மூலம் நேற்று 40 பத்திரங்கள் பதிவு செய்ய முன்பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக பத்திர எழுத்தர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

இச்சோதனையின்போது ரூ. 1.05 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது. இதனை தொடர்ந்து சார் பதிவாளர் (பொறுப்பு) வெங்கடேசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT