Regional01

அஞ்சல் அலுவலகங்களில் நாளை சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு முகாம்

செய்திப்பிரிவு

உலக சிக்கன தினத்தையொட்டி, அஞ்சல் அலுவலகங்களில் நாளை (31-ம் தேதி) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் நடக்கிறது.

இதுதொடர்பாக சேலம் கிழக்குக் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உலக சிக்கன தினம் நாளை (31-ம் தேதி) கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சேலம் கிழக்குக் கோட்டத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் நாளை சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் நடத்தப்படுகிறது.

எனவே, உலக சிக்கன தினத்தை யொட்டி, பொதுமக்கள் புதிய அஞ்சல் சேமிப்பு கணக்குகளை, அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கி பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT