கிருஷ்ணகிரியில் தண்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. அடுத்த படம்: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன். 
Regional02

தண்டு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் தண்டு மாரியம்மன் கோயில் கும்பா பிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை வன்னிய தெருவில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த 27-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், ஹோமங்கள், சர்வ முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, யாக சாலையிலிருந்து தீர்த்தக்குடம் மேள வாத்தியத்தோடு ஆலயத்தை சுற்றி ஞான உலா வந்து, கோபுர விமானத்துக்கும், தண்டு மாரியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி தண்டு மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், கோபூஜை, சப்தகன்னிகா பூஜை, தசதரிசனம், சோடச உபச்சாரம், மந்தரபுஷ்பம், வேதபாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT