பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.4.50 லட்சம் மதிப்பிலான குட்கா பார்சலை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா சுங்கச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 50 பெட்டிகள் மற்றும் 10 கோணிப்பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4.50 லட்சம் இருக்கும்.
இதையடுத்து பெங்களூ ருவைச் சேர்ந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் ஒளிராஜ் (25) என்பவரை காவல் துறையினர் கைது செய்து குட்கா பார்சலையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.