Regional02

திருப்பத்தூர் அருகே முதியவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை மகளிர் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (88). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி நாகம்மாள் (80).

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை தனது வீட்டின் வராண்டாவில் நாகம்மாள் அமர்ந் திருந்தபோது, அதேபகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பார்த்தீபன் (66) என்பவர் மது போதையில் நாகம்மாளின் கையை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நாகம்மாள் கூச்ச லிட்டத்தால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே, பார்த்தீபன் அங்கிருந்து தப்பியோடினார்.

காவல் நிலையத்தில் புகார்

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் மூதாட்டியிடம் அத்துமீறிய பார்த்தீபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT