இந்திய அளவில் பாஜகவின் வெற்றிக்கும், தமிழகத்தில் அதிமுகவின் வெற்றிக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்தியில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் மகத்தான வெற்றியைப் பெறுகிறது அதிமுக.
இந்த நிலையில், பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் தளம் மூலம் வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.
"நரேந்திர மோடி ஜி, உங்களின் சரித்திர வெற்றிக்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிக்கிறேன். வாழ்த்துகள்" என்று மோடிக்கும், "தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜிக்கு, அவரது மகத்தான வெற்றிக்காக வாழ்த்துகிறேன்" என்றும் ரஜினி ட்வீட்டியுள்ளார்.