கார் விபத்தில் இறந்த பெண் வேட்பாளர் ஷோபா நாகிரெட்டி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், ஆள்ளகட்டா சட்டமன்ற தொகுதியில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் பூமா ஷோபா நாகிரெட்டி போட்டியிட்டார். இவர் ஏற்கெனவே 4 முறை எம்.எல்.ஏ வாக இத்தொகுதியில் பணியாற்றி உள்ளார்.
இவர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி இரவு, பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, வழியில் கிடந்த நெல் குவியலில் கார் ஏறி இறங்கியது. இதனால் கார் விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இவர் வெற்றி பெற வேண்டும் என இவர்களது இரண்டு மகள்கள், மகன் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண் டனர்.
வெள்ளிக்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஷோபா நாகிரெட்டி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேச வேட்பாளரை விட 41 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.