மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மதச்சார் பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி கூறியிருப்ப தாவது:
மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க மதச் சார்பற்ற கட்சிகள் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஓரணியில் திரள வேண்டும். மம்தா மதச்சார்பற்றவர், அவரது நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. மக்களவைத் தேர் தல் முடிவுகளில் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் அதை காங் கிரஸ் ஏற்றுக் கொள்ளும். ஒரு வேளை கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டால் அதற்காக தலைமையை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று அவர் தெரிவித்தார்.
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறிய தாவது: மத்தியில் மதச்சார்பற்ற அரசுக்கு ஆதரவு அளிக்க மட்டுமே திமுக விரும்புகிறது. 2002 குஜராத் கலவர பின்னணி காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என்று அவர் கூறினார்.
பாஜக கூட்டணிக்கு தெலங் கானா ராஷ்டிர சமிதி ஆதரவு அளிக் கும் என்று தகவல்கள் வெளியாகி யுள்ள நிலையில் அந்தக் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ் கூறியதாவது:
மத்தியில் அமையும் புதிய அரசு தெலங்கானாவுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு இப்போது பதில் அளிக்க முடியாது.
இதுகுறித்து கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற குழுக்கள் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.