இதர மாநிலங்கள்

இந்தியா வென்றுவிட்டது: ட்விட்டரில் மோடி உற்சாகம்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் கூட்டணி கட்சிகளின் துணையின்றி, பாஜக தனிப் பெரும்பான்மை பெறும் என்றும் தெரிகிறது.

இதனையடுத்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,

"இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இது பாரதத்தின் வெற்றி.

நல்ல நாட்கள் வரவுள்ளன"

என்று தெரிவித்துள்ளார்.

மோடியின் இந்த ட்வீட் 36 ஆயிரத்திற்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களால் மீண்டும் பகிரப்பட்டுள்ளது (ரீட்வீட்). நரேந்திர மோடி தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT