மத்திய சென்னையில் திமுக வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
5-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் 1,18,667 வாக்குகள் பெற்று, 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 1,05,359 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் 44,865 வாக்குகள் பெற்றுள்ளார்.