இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தல் இன்னும் இருக்கிறது. தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
மேலும், ஏப்ரல் 14-ம் தேதி வரை இருந்த ஊரடங்கை மத்திய அரசு மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் நீட்டித்துள்ளது. தமிழக அரசு ஏப்ரம் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.
இந்த ஊரடங்கு தொடங்கி இன்று (ஏப்ரல் 14) 21-வது நாள். இவ்வளவு நாட்கள் எப்படிச் சென்றன? எப்படி உங்களுடைய பொழுதைக் கழித்தீர்கள்? அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து பார்ப்பது எளிதாக இருந்ததா? 20 நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தது என்ன மாதிரியான மனநிலையை அளித்தது? இந்த ஊரடங்கில் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன? குடும்பத்துடன் நேரத்தைக் கழித்தது எப்படி இருந்தது? எந்தத் தேவைகளுக்கு எல்லாம் வெளியே சென்றீர்கள்? மது - புகை பிடிப்பவர்களாக இருந்தால் இந்த கரோனா ஊரடங்கில் என்ன செய்தீர்கள்?
வாருங்கள்... விவாதிப்போம்....!
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...