தஞ்சாவூர் பெரிய கோயிலில் சோழ மன்னன் ராஜராஜன் விமான கோபுரத்தை எழுப்பியுள்ளார். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அச்சுதப்ப நாயக்க மன்னன் பெரிய நந்தியையும், நந்தி மண்டபத்தையும் கட்டினான். பாண்டிய மன்னன் பெரியநாயகி அம்மன் கோயிலையும், செவ்வப்ப நாயக்க மன்னன் கந்தகோட்டத்தையும், மல்லப்ப நாயக்கர் மண்டபத்தையும் கட்டினர். மராட்டியர் காலத்தில் விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது.