இதர மாநிலங்கள்

சர்ச்சைப் பேச்சு: ராகுலிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

பாஜக ஆட்சிக்கு வந்தால் 22000 மக்கள் கொல்லப்படுவார்கள் என்று சமீபத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மே 1-ம் தேதி ஹிமாச்சல பிரதேச மாநிலம் சோலன் நகரில், ராகுல் காந்தி மேற்கொண்ட பிரசாரத்தில்,‘ பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் குறைந்தது கொல்லப்படுவார்கள். இந்த அச்சம் மக்களிடையே பரவிக் கிடக்கிறது’ என்றார்.

பா.ஜ.க.வின் புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் மீறியதற்கான முகாந்திரம் உள்ளதாக கூறியுள்ளது. மற்ற கட்சிகளின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக ஆதாரமற்ற கருத்துகளை கூறுவது தவறு என ஆணையம் கருதுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ராகுலின் பேச்சுத் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாஜகவின் புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் மீறியதற்கான முகாந்திரம் உள்ளதாக கூறியுள்ளது.

இந்த புகாரை அடுத்து, தேர்தல் ஆணையம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அணுப்பியுள்ளது. மற்ற கட்சிகளின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக ஆதாரமற்ற கருத்துகளை கூறுவது தவறு என்பதால் வரும் 12 ம் தேதிக்குள் இது குறித்து விளக்கமளிக்குமாறு ராகுலுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, வாக்குப்பதிவு இயந்திரத்தை ராகுல் பார்வையிட்டது குறித்து விசாரிக்குமாறு தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT