காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வரும் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு செல்ல அக்கட்சியின் மேலிடம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியிலிருந்து மக்களவைக்கு சென்ற ப.சிதம்ப ரம், இந்த முறை அவர் போட்டி யிடாமல் விலகிக் கொண்டார். அதே நேரம் தனக்கு பதிலாக தன்னுடைய மகன் கார்த் தியை முதல் முறையாக களமிறக்கி யுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடகாவில் இருக் கும் 4 மாநிலங்களவை உறுப்பி னர்களின் பதவிக் காலம் வரும் ஜூன் 25-ம் தேதியுடன் முடிவடை கிறது. எனவே புதியதாக காங் கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட விருக்கும் உறுப்பினர்களில் ப.சிதம்பரம் ஒருவராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் கர்நாடக மாநில காங்கிரஸிற்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது கர்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சி 122 உறுப்பினர்களுடன் பெரும்பான் மையாக இருக்கிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 46 சட்டமன்ற உறுப்பி னர்களின் வாக்குகள் போதுமானது என்பதால் காங்கிரஸ் சார்பாக 2 உறுப்பினர்கள் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். 46 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பா.ஜ.க. ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும்.
எனவே காங்கிரஸில் மீதம் இருக்கும் 27 சட்ட உறுப்பினர்களின் வாக்குகளுடன் சேர்ந்து, தேவ கவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 40 உறுப்பினர் களிடம் ஆதரவு கோர காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது. தேவ கவுடாவின் கட்சி காங்கிரஸை ஆதரிக்கும் பட்சத்தில், காங் கிரஸ் 3 மாநிலங்களவை உறுப்பி னர்களை தேர்வு செய்ய முடியும்.
எனவே காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவைக்கு முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தற்போதைய மாநிலங் களவை உறுப்பினர் ஹரி பிரசாத் ஆகியோர் தேர்வு செய்ய விருப்பதாக கூறப்படுகிறது.