இதர மாநிலங்கள்

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி: கட்சிகளுக்கு பாஜக அழைப்பு

செய்திப்பிரிவு

தங்கள் கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற்றாலும்கூட, தேர்தலுக்கு முன் அணியில் இடம்பெறாத கட்சிகளின் ஆதரவைப் பெறத் தயாராக இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், "நடந்து முடிந்திருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும்.

இந்திய மக்கள் நிலையான மற்றும் செயலாற்றும் ஓர் அரசு வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளையும், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட்டணியில் இணைக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.

இதனிடையே, பாஜக மூத்த தலைவரான முக்தர் அபாஸ் நக்வி கூறுகையில், "தேர்தலுக்கும் பிந்தைய கூட்டணி என்பது அமையாமலே பாஜக பெரும்பான்மை பெற்றுவிடும். எனினும், நிலையான மக்கள் ஆட்சி ஏற்பட கட்சிகளுக்கு நிபந்தனை இல்லாத வரவேற்பு அளிக்கப்படும். மக்களுக்கு பணியாற்ற தொங்கு நாடாளுமன்ற ஆட்சி ஏற்படாமல், நிலையான அரசு அமைக்கவே தேசிய ஜனநாயக கூட்டணி ஆயத்தமாகிறது" என்றார்.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மாநில கட்சிகளுக்கு பாஜக அழைப்பு விடுத்து நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் இணைய வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

SCROLL FOR NEXT