இதர மாநிலங்கள்

இந்தியாவை வல்லரசாக்குவார் மோடி: விஜயகாந்த் வாழ்த்து

செய்திப்பிரிவு

இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி உலக அரங்கில் இந்திய தேசத்தை வல்லரசாக மாற்ற வாழ்த்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்களவை தேர்தலில் உங்கள் (மோடி) தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி கட்சி பெற்றுள்ள வெற்றிக்காக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாமான்ய மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு அவற்றை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். குஜராத்தில் இருப்பதை போல் ஊழலற்ற அரசை அமைக்க வேண்டும். உங்கள் ஆட்சியில் இந்திய தேசத்தில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும். பொருளாதாரம் மேம்படும்.

உங்களது அனைத்து செயல்பாடுகளும் வெற்றிகரமாக அமைய மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT