இதர மாநிலங்கள்

மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவின்போது வன்முறை: 13 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் திரிணமூல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதா13 பேர் படுகாயமடைந்தனர்.

மக்களவை தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 41 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் இன்று காலை ஹரோவா வாக்குச்சாவடியில், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுப்பட்டனர். இதனால் ஏற்பட்ட மோதலில் 13 பேர் காயம் அடைந்தனர். வன்முறையை தடுக்க பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்தனர்.

இந்த மோதலை அடுத்து மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவுகிறது. சம்பவ இடத்திற்கு துணை பாதுகாப்பு படை மற்றும் ரிசர்வ் போலீசார் விரைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT