இதர மாநிலங்கள்

தேர்தல் முடிவு எதிரொலி: குஜராத்தில் மோடி பேரணி

செய்திப்பிரிவு

மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மோடி இன்று மாலை குஜராத்தில் மூன்று இடங்களில் பேரணி மேற்கொள்கிறார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 11.30 மணி நிலவரப்படி பாஜக 279, காங்கிரஸ் 48, திரிணாமூல் 33, சமாஜ்வாதி 8, அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் பாஜக தேர்தல் வெற்றி குறித்து "சூப்பர்ப்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு நன்றி சொல்லும் வகையில் நரேந்திர மோடி இன்று வதோதரா, அகமதாபாத், காந்திநகர் ஆகிய தொகுதிகளில் பேரணி மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக மோடி, 3 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து 5000 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார், 440 பேரணிகளை நடத்தினார் என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT