உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரச்சாரம் செய்யும் ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலின் குடும்பத்தினர், பாஜக தலைவர்கள் அமித்ஷா, அருண் ஜேட்லி ஆகியோர் இன்று மாலை பிரச்சாரம் முடிந்ததும் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாரணாசி கூடுதல் ஆட்சியர் (நகர்ப்புறம்) எம்.பி.சிங் கூறியதாவது: எந்த கட்சிக்கோ அல்லது வேட்பா ளருக்காகவோ பிரச்சாரம் செய்பவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளராக இல்லா மல் இருந்தால் அவர்கள் பிரச்சார கெடுகாலம் முடிந்ததும் வெளியேற்றப்படுவார்கள். இதற்கான நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ளும். இதில் கட்சி பாரபட்சம் காட்டுவதில்லை.
வாக்காளராக இல்லாத ஒருவர், பிரச்சார கெடு காலம் முடிந்த தும் அவர் தொகுதியில் இருப் பதை அனுமதிக்கமாட்டோம். பிரச் சாரம் முடிந்ததும் அவரை வெளியேற்றுவோம்.
கேஜ்ரிவால் குடும்பத்தி னராக இருக்கட்டும் அல்லது பாஜக தலைவர்கள் அமித் ஷா போன்றவர்களாக இருக்கட்டும். யாராக இருந்தாலும் அவர்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்றார் சிங்.
மே 12-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான பிரச்சாரம் சனிக் கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. கேஜ்ரிவால், பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் உள்ளிட்டோர் வாரணாசி தொகுதியின் மிக முக்கிய வேட்பாளர்கள்.