ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமன் வெற்றி பெற்றுள்ளார். அவர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதியை 18,908 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து ஆலந் தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடந்தது.
இந்த இடைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமன், திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, தேமுதிக வேட்பாளர் காமராஜ், காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், ஆம் ஆத்மி வேட்பாளர் பத்திரிகையாளர் ஞாநி உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.
இதில் அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமனுக்கு 89,295 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு 70,587 வாக்குகளும் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட் ராமன் 18,908 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் தேமுதிக-வுக்கு 20,442 வாக்குகளும், காங்கிரஸுக்கு 6,535 வாக்குக ளும், ஆம் ஆத்மிக்கு 5,729 வாக்குகளும், நோட்டா வுக்கு 4248 வாக்குகளும் கிடைத்தன.
இந்த வெற்றியின் மூலம் அதிமுகவின் பலம் சட்டபேரவையில் கூடுகிறது.