இதர மாநிலங்கள்

மக்களவை தேர்தல் நிலவரம்: மோடிக்கு அத்வானி வாழ்த்து

செய்திப்பிரிவு

16-வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளில் பாஜக 280 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

நாடு முழுவதும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் பாஜகவுக்கு சாதகமாக இருந்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், மக்களவை தேர்தல் நிலவரங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT