அசாம், மேகலாயா, மிசோரம், திரிபுரா உள்ளிட்ட 8 வடகிழக்கு மாநிலங்களில் 25 நாடாளுமன்ற தொகுதியில் 9 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அசாமில் 14 நாடாளுமன்ற தொகுதியில் பாஜக 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
நாகலாந்தில் என்.பி.எஃப் கட்சி முன்னிலை வகிக்கிறது. மேகாலயாவில், காங்கிரஸ், என்.பி.பி கட்சிகளில் தலா ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.